தேசத்தின் பௌதீக ஒருமைப்பாட்டிற்காக உயிர்நீத்த, வலது குறைந்த மற்றும் ஓய்வு பெற்ற இராணுவம், கடற்படை, வான்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் சேவையின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய நெறுங்கிய உறவினர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்துதல், கட்டுப்படுத்துதல் மற்றும் சீரான முறையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு விசேடமான சிறப்புரிமை அட்டையொன்றை அறிமுகப் படுத்துதல்
![]() ![]() |
01. | நடவடிக்கையின் போது தீவிரவாத தாக்குதலினால் உயிர்நீத்த இராணுவ/ கடற்படை /வான்படை மற்றும் பொலிஸ்/ சிவில் பாதுகாப்பு படையில் கடமையில் ஈடுபட்டிருந்த வீரர்களின் கீழ் குறிப்பிட்டுள்ள விபரங்களை உடையவர்கள் | ||
அ. | நடவடிக்கையின் போது உயிர்நீத்த திருமணமான அதிகாரிகள்/ஏனைய வீரர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள். | ||
ஆ. | நடவடிக்கையின் போது உயிர்நீத்த திருமணமாகாத அதிகாரிகள்/ஏனைய வீரர்களின் தாய்/தந்தை மற்றும் பாதுகாவலர். | ||
இ. | நடவடிக்கையின் போது உயிர்நீத் ததிருமணமாகாத அதிகாரிகள்/ஏனைய வீரர்களின் தாய் /தந்தை தவிர்ந்த தன்னை வளர்த்த பெயர் குறிப்பிட்டுள்ள பாதுகாவலர். | ||
02. | நடவடிக்கையின் போது தீவிரவாத தாக்குதலினால் காயமடைந்து வலது குறைந்த நிலையை அடைந்த இராணுவ /கடற்படை /வான்படை /பொலிஸ்/ சிவில்பாதுகாப்பு படையில் கடமையில் ஈடுபட்டிருந்த வீரர்களின் கீழ் குறிப்பிட்டுள்ள விபரங்களை உடையவர்கள் | ||
அ. | நடவடிக்கையின் போது தீவிரவாத தாக்குதலினால் காயமடைந்து வலது குறைந்தவிகிதம் 20% அல்லது அதைவிட கூடிய விகிதத்தை உடைய தற்போது கடமையில்உள்ளவர்கள். | ||
ஆ. | நடவடிக்கையின் போது தீவிரவாத தாக்குதலினால் காயமடைந்து வலது குறைந்தவிகிதம் 20% அல்லது அதைவிட கூடிய விகிதத்தை உடைய மருத்துவ காரணங்களினால் சேவையிலிருந்து விலகிய மற்றும் ஓய்வு பெற்றவர்கள். | ||
01. | இந்த விருசர சிறப்புரிமை அட்டையை பெற்றுக்கொள்ளவதற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் சமர்ப்பித்தல் வேண்டும். | |
அ. | நடவடிக்கையின் போது உயிர்நீத்த அதிகாரிகள்/ஏனைய வீரர்களின் நெறுங்கிய உறவினர்கள் விண்ணப்பிக்கும் போது செ.மீ 3 x 2 கடவுச்சீட்டு முத்திரை அளவுடைய வர்ணபுகைப்படங்கள் இரண்டுடன் விண்ணப்பப் படிவத்தில் உள்ள கிராம சேவகரின்சான்றிதழ் பகுதியை கட்டாயமாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் வேண்டும். | |
ஆ. | நடவடிக்கையின் போது வலது குறைந்த அதிகாரிகள்/ஏனைய வீரர்கள் இவ்விருசர சிறப்புரிமை அட்டையை பெற்றுக்கொள்ளவதற்கு செ.மீ 3 x 2 கடவுச்சீட்டு முத்திரை அளவுடையவர்ண புகைப்படங்கள் இரண்டுடன் குறிப்பிட்ட அதிகாரி/ஏனைய வீரர் கடமைபுரியும் ஆயுதப்படையின் நலன்புரிப் பிரிவின் தலைவரினால் உறுதிசெய்த பின் போர்வீர சேவைகள் அதிகார சபைக்கு சமர்ப்பித்தல் வேண்டும். | |
அ. | சலுகை விலையில் மருத்துவ வசதியை பெற்றுக் கொள்ளல் மற்றும் ஒசுசலையின் மூலம் சலுகை விலையில் மருந்துகளை பெற்றுக் கொள்ளல். | |
ஆ. |
தூர சேவை பேருந்து வண்டிக்குள் நுழையும் போது சிரமமின்றி (வரிசையில் நிற்காது) நுழைய முடிதல். |
|
இ. | வீட்டைக் கட்டிக் கொள்வதற்காக அரச/தனியார் வங்கிகள் மூலம் வீட்டுக் கடன் பெற்றுக் கொள்ள தேவைப்படின் அக்கடனை குறிப்பிட்ட வங்கியின் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் பெற்றுக்கொள்ள முடிதல். | |
ஈ. | கல்விகற்கும் பிள்ளைகளுக்காக பல்வேறு நிறுவனங்களில் சலுகை அடிப்படையில் பாடநெறிகளை பின்பற்றுவதற்கான வாய்ப்பு மற்றும் இலவசமாக பாடநெறிகளை பின்பற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளல். | |
உ. | சலுகை வட்டி அடிப்படையில் வாகனக் குத்தகை வசதி பெற்றுக் கொள்ள தேவைப்படின் அதனை பெற்றுக்கொள்ள முடிதல் (அரச/தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம்) | |
ஊ. | நடவடிக்கையின் போது தீவிரவாத தாக்குதலினால் காயமடைந்து வலது குறைந்தவிகிதம் 60% விட கூடியவர்களுக்கு வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக இலவச பஸ்/புகையிரத கடவுச் சீட்டினைகுறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடிதல். | |
எ. | அன்றாட வீட்டுத் தேவைகளுக்காக மசாலா வகைகளை சலுகை அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடிதல். | |
ஏ. | மாதாந்த கொடுப்பணவு அடிப்படையில் தள்ளுபடிகளுடன் மின் உபகரணங்ளை பெற்றுக்கொள்ள முடிதல். | |
அ. | இவ்வட்டையை ஒழுக்கமற்ற முறையில் பாவித்தது உறுதி செய்யப்படின். | |
ஆ. | கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகளினால் பொலிஸ்/ நீதிமன்றத்தின் மூலம் குற்றவாளியாக்கப்பட்டு சிறைப்படுத்தப்படின் (போதைப் பொருள்/திருட்டு /கற்பழிப்பு /கொள்ளையடித்தல் போன்ற குற்றங்கள்) | |
அ. | இவ்விருசர அடையாள அட்டையை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றம் செய்தல், பரிமாற்றம் செய்தல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதோடு, அவ்வாறு செய்தது உறுதி செய்யப்படின் குறித்த நபருக்கும் அவரின் பயனாளிகளுக்கும் இதன் மூலம் கிடைக்கப் பெறுகின்ற சகல சிறப்புரிமைகளும் இழக்க நேரிடும். | |
ஆ. | வழங்கப்படுகின்ற விருசர சிறப்புரிமை அட்டையின் செல்லுபடியாகும் காலம் ஐந்து வருடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. | |
இ. | வழங்கப்படுகின்ற அட்டை காலவதியாகிய பின்னர் அவ்வட்டைக்கான பதில் அட்டையை பெற்றுக் கொள்வதற்கு குறிப்பிட்ட முறைக்கைமைய புதிய விண்ணப்பப் படிவம்சமர்ப்பித்தல் வேண்டும் . | |
ஈ. | அட்டையின் உரிமையாளர் காலமானாராயின் அவருக்கு வழங்கப்பட்ட அட்டையை ஆயுதப்படையின் /திணைக்களத்தின் நலன்புரிப் பிரிவின் மூலம் போர்வீரசேவைகள் அதிகார சபையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்தல் வேண்டும். | |